×

காரைக்குடியில் கைக்கு வந்து சேராத கொரோனா நிதி: தடுப்பு பணிகளில் தடுமாறும் ஊராட்சிகள்

காரைக்குடி: ஊராட்சிகளுக்கு இதுவரை கொரோனா நிதி வழங்காததால் வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியாமல் ஊராட்சி நிர்வாகம் தடுமாறி வருகிறது. காரைக்குடி தாலுகாவுக்கு உட்பட்டு சாக்கோட்டை, கல்லல் என இரண்டு ஒன்றியங்கள் உள்ளன. இந்த ஒன்றியங்களுக்கு உட்பட்டு 50க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. இதில் ஒரு சில ஊராட்சிகளுக்கு பல்வேறு வகையில் வரிவருவாய் உள்ளதால் ஊராட்சி நிதி அதிகஅளவில் உள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கிராமப்புறங்களில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. இதன்படி கிருமி நாசினி தெளித்தல், மேல் நிலை நீர்தேக்க தொட்டியில் குளோரின் பவுடர் தெளித்தல், தெருக்களில் பிளீச்சிங் பவுடர் போடுதல் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான பொருட்கள் வாங்குவது, தொழிலாளர் சம்பளம் என ஒவ்வொரு முறையும் குறைந்தது ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்யவேண்டிய நிலை ஏற்படுகிறது.

ஆனால் இதற்கான எந்தவிதமான நிதியையும் அரசு ஒதுக்கவில்லை. இதனால் ஊராட்சி தலைவர்கள் தங்களின் சொந்த நிதியில் இருந்து செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளதால் ஒருமுறை மட்டுமே தூய்மை பணியை செய்துவிட்டு கிடப்பில் போடுகின்றனர். தொடர்ந்து கிருமி நாசினி தெளித்தால் தான் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என்ற நிலையில் நிதி ஒதுக்காததால் கிராமங்களில் வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து ஊராட்சி தலைவர்கள் சிலர் கூறுகையில் வரிவருவாய் உள்பட பல்வேறு வகையில் வருமானம் வரக்கூடிய ஊராட்சிகள் தங்களின் சொந்த நிதியில் இருந்து கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். ஆனால் எந்தவிதமான வருவாயும் இல்லாத பகுதிகளில் மிகவும் திண்டாட்டமாக உள்ளது. கொரோனா ஒழிப்புக்கு என சிறப்பு நிதி ஒதுக்கப்படும் என அறிவித்ததோடு சரி. ஆனால் இதுவரை கைக்கு வரவில்லை. பஞ்சாயத்துகளில் உள்ள உபரி நிதியில் இருந்து ரூ.ஒரு லட்சம் ஒதுக்குவதாக கூறினர். ஆனால் அதுவும் இதுவரை ஒதுக்கவில்லை. இதனால் கைக்காசை போட்டு தான் செலவு செய்து வருகிறோம் என்றனர்.

கிருமி நாசினி தெளித்தல், மேல் நிலை நீர்தேக்க தொட்டியில் குளோரின் பவுடர் தெளித்தல், தெருக்களில் பிளீச்சிங் பவுடர் போடுதல் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான பொருட்கள் வாங்குவது, தொழிலாளர் சம்பளம் என ஒவ்வொரு முறையும் குறைந்தது ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்யவேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆனால் இதற்கான எந்தவிதமான நிதியையும் அரசு ஒதுக்கவில்லை.

Tags : Karaikudi , Non-corona, fund ,Karaikudi,blockchain
× RELATED காரைக்குடியில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ ரத்து!