×

போடி அருகே புலியூத்து மலையில் பயங்கர காட்டுத் தீ: அரிய வகை மரங்கள் நாசம்

போடி: போடி அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று மாலை பரவிய காட்டுத் தீயால் அரிய வகை மரங்கள் நாசமாகின.தேனி மாவட்டம், போடி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் போடி மெட்டு 8வது கொண்டை ஊசி வளைவில் புலியூத்து மற்றும் போடி வடக்கு மலை, மரக்காமலை ஆகிய வனப்பகுதிகள் உள்ளன. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான இங்கு காப்பி, மிளகு, ஏலம், மா, எலுமிச்சை, சப்போட்டா, தென்னை, இலவம், மா ஆகியவை சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மாலை 5 மணியளவில் புலியூத்து மற்றும் மரக்காமலை பகுதிகளில் பயங்கர காட்டுத் தீ பரவியது. 3 மணி நேரத்துக்கும் மேலாக காட்டுத் தீ எரிந்து கொண்டிருந்தது. இதனால் அரியவகை மரங்களும், வனவிலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன. வனத்துறையினர் முறையாக ரோந்து செல்லாமல் இருப்பதால் காட்டுத் தீ பரவுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

Tags : forest fire ,Pulitu hill ,Bodi ,Terrible Forest ,hill , Terrible, forest fire ,Pulitu ,destroyed
× RELATED கொடைக்கானல் மேல்மலையில் கட்டுக்குள்...