×

கொரோனா மரபணு வரிசையை கண்டறிந்த பெண் விஞ்ஞானியை மிரட்டிய சீனா!!! : வெளியான அதிர்ச்சி தகவல்

பெய்ஜிங் : ஆரம்பத்திலேயே கொரோனாவின் மரபணுக்களை வரிசைப்படுத்தி தீர்வை கண்டறிந்த ஆய்வாளரை சீன அரசு மிரட்டியுள்ளது.சீன மக்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பங்கெடுப்பது மாமிச சந்தைகளும் விலங்குகளும் ஆனால் அதுவே தற்போது உலகம் முழுவதும் கொரோனா எனும் பெயரில் ஆட்டம் போட்டு வருகிறது. சீனா கொரோனா விவகாரத்தில் உண்மையை மறைக்கிறது என அமெரிக்கா குற்றம் சாட்டி வந்த நிலையில் கொரோனா கிருமிகளின் மரபணுக்களை வரிசைப்படுத்தி ஜனவரியிலேயே இதற்கான தீர்வை கண்டறிந்த ஆய்வாளரை சீனா மிரட்டிப் பணிய வைத்ததாக தகவல் வெளிவந்துள்ளது.

வூகானில் வவ்வால் பெண்மணி என அறியப்படும் ஷி ஜெங்லி என்ற பிரபல வைரஸ் ஆய்வாளரே கொரோனா  வைரஸ் தொடர்பில் அதன் மரபணுக்களை வரிசைப்படுத்தி, தீர்வையும் வெளியிட்டவர்.இவரே சீனாவின் வவ்வால் குகைகளில் மறைந்திருக்கும் சார்ஸ் போன்ற கொடிய வைரஸ்களை அடையாளம் கண்டவர்.  
அது மட்டுமின்றி, வூகான் நகரில் கொரோனா பரவிய தொடக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மாதிரிகளை சேகரித்து அதை உறுதிப்படுத்தியும் உள்ளார்.தொடர்ந்து மூன்றே நாட்களில் அதன் மரபணுவை வரிசைப்படுத்தி, கொரோனாவுக்கான தீர்வையும் கண்டறிந்துள்ளார்.

ஆனால் சீனா நிர்வாகம் இந்த தகவலை அறிந்து, அவரை மிரட்டி தங்களுக்கு சாதகமாக அவரை பணிய வைத்துள்ளது.ஆய்வாளர் ஷி கண்டறிந்த தகவல்களை சீனா உரிய காலத்தில் வெளிப்படுத்தியிருந்தால் கொரோனா பரவலை தடுத்திருக்க முடியும் என்பது மட்டுமின்றி, மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும். கொரோனா அதி வேகமாக உகான் நகரில் பரவியதை அடுத்து இரண்டு மாத காலம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காலகட்டத்தில் ஆய்வாளர் ஷி உடன் பத்திரிகையாளர் ஒருவர் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அவரிடமே சீன அரசாங்கத்தால் மூடி மறைக்கப்பட்ட இந்த தகவலை ஆய்வாளர் ஷி வெளிப்படுத்தியுள்ளார். ஜனவரி 2ம் தேதி ஆய்வாளர் ஷியின் ஆய்வகம் மரபணுவை வரிசைப்படுத்தியதுடன், தீர்வையும் கண்டறிந்துள்ளது .


Tags : scientist ,China , Corona, gene, sequence, female scientist, China
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...