×

நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல அனுமதிக்கலாம்; கடலோர மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு அறிவுறுத்தல்

சென்னை: உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழ்நாட்டில், கடந்த 24ம் தேதி மாலை 6 மணி முதல் 31.3.2020 வரை ஊரடங்கு உத்தரவு முதலில் பிறப்பிக்கப்பட்டது. பின்னர்  மத்திய அரசு இன்று வரை நீட்டித்தது. ஊரடங்கு உத்தரவு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருவதன் காரணமாக தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பெரிய அளவில் பரவாது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கை  நீட்டிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இன்று நாட்டு மக்களிடம் உரையாற்றி பிரதமர் மோடி, வரும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டார்.

முன்னதாக, மீன்பிடி தொழிலை பொறுத்தவரை மீன்பிடித்தல், பிடிக்கப்படக்கூடிய மீன்களை பதப்படுத்துதல், மீன்களை வளர்த்து விற்பனை செய்தல், அதேபோல மீன்களை சேமித்து வைத்தல், வளர்ப்பு மீன்களுக்கு தேவையான உணவுகளை  தயாரிக்கக்கூடிய நிறுவனங்கள், வணிக ரீதியாக மருந்து உள்ளிட்ட தேவைகளுக்காக மீன்களை உற்பத்தி செய்து அவற்றை பயன்படுத்தக்கூடியவர்கள், ஒரு இடத்தில் இருந்து மற்றோரு இடத்திற்கு மீன்களை கொண்டு செல்லும் வாகனங்கள்,  அதேபோன்று பிற மீன் சார்ந்த பொருட்கள் அதற்கான வேலையாட்கள் செல்வதற்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது.

இந்த நிலையில், நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல அனுமதிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சமூக இடைவெளி, முன்னெச்சரிக்கை நடவடிக்கை பின்பற்றப்படுகிறதா என கண்காணிக்கவும்  உத்தரவிட்டுள்ள அரசு, நாட்டுப்படகு மற்றும் விசைப்படகுகளுக்கு கடலோர மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி வழங்கலாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. ஊரடங்கால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க முடியாத சூழல் இருந்தது. இதனால்  அவர்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது, கடலுக்கு செல்ல அனுமதியளித்துள்ளது மீனவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Fishermen ,sea ,district rulers ,Coastal District Collectors , Fishermen and fishermen may be allowed to go to sea; Government Instruction of Coastal District Collectors
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...