×

இன்று முதல் அமல்; சென்னையில் முககவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500 அபராதம்; தமிழக காவல்துறை அறிவிப்பு

சென்னை: இந்தியா உள்ளிட்ட 205 நாடுகளும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கபட்ட மாநிலத்தில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. நேற்று  முன்தினம் வரை 2-ம் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இன்று வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.

இருப்பினும், கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தினால், இன்று நாட்டு மக்களுடன் 4-வது உரையாற்றிய, பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கபடுவதாக அதிரடியாக அறிவித்தார். மேலும், ஏப்ரல்  20-ம் தேதிக்கு பின்னர் சில பணிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும் என்றார். மேலும், நாட்டு மக்களுக்கு 7 வேண்டுகோள்களை பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ளார். அதில் முக்கியமாக, மக்கள் வெளியில் வரும் போது கட்டாயம்  முகக்கவசம் அணிய வேண்டும் என்றார்.

இதற்கிடையே, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பொதுமக்கள் வெளியை வராத வண்ணம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசியமின்றி வெளியை சுற்றித்திரியும் பொதுமக்களுக்கு மீது நடவடிக்கையும் எடுத்து  வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் முககவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என்றும் இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. மேலும், தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டம் 179வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu ,Chennai , Effective today; Rs 500 fine for driving without a face covering in Chennai; Tamil Nadu police notification
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...