×

சென்னையில் இருந்து 3 சிறப்பு விமானங்களில் 328 ஜப்பானியர், அமெரிக்கர்கள் சொந்த நாடுகளுக்கு பயணம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு தற்போது, ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் தங்கி பணிபுரிந்து வந்த வெளிநாட்டினர் தொடர்ச்சியாக தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்பி செல்கின்றனர். இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு விமான சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அந்தந்த நாட்டு தூதரக அதிகாரிகள், மத்திய அரசுடன் பேசி, சிறப்பு அனுமதி பெற்று தங்கள் நாட்டு மக்களை தனி விமானங்களில் அனுப்பி வைக்கின்றனர்.கடந்த 2 வாரங்களில் சென்னையில் இருந்து மலேசியா, ஜெர்மன், அமெரிக்கா, ஓமன் நாடுகளை சேர்ந்தவர்கள் 16 சிறப்பு தனி விமானங்களில் தங்கள் நாடுகளுக்கு திரும்பினர்.

அதை தொடர்ந்து, கடந்த 11ம் தேதி 5 சிறப்பு தனி விமானங்களில் சிங்கப்பூர், ஜப்பான், அமெரிக்கா நாடுகளை சேர்ந்த 941 பேர் தங்களது நாடுகளுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு கார்பரேட் நிறுவனங்களில் பணியாற்றிய ஜப்பானியர்கள் 232 பேர் சென்னையிலிருந்து தனி சிறப்பு விமானத்தில் நேற்று முன்தினம் இரவு ஜப்பான் புறப்பட்டனர். இதே போல் தமிழகத்தில் வசித்த 7 குழந்தைகள் உள்பட 96 அமெரிக்கர்கள் சிறப்பு தனி விமானத்தில் நேற்று முன்தினம் மாலை சென்னையில் இருந்து மும்பை வழியாக அமெரிக்கா புறப்பட்டனர்.

Tags : Chennai ,Americans ,Japanese ,flights ,Chennai. 328 , 328 Japanese , Americans, Chennai, 3 special flights , Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...