×

எம்ஜிஆர் உறவினர் வீட்டில் வேலைக்காரி தற்கொலை

சென்னை: முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் மனைவி ஜானகியின் தம்பி மகன் ராமச்சந்திரன் தனது குடும்பத்துடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மாதா கோயில் தெருவை சேர்ந்த ஜான்சிராணி (24) என்பவர் வேலை செய்து வந்தார். இவர், அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, வீட்டின் உரிமையாளர் ராமச்சந்திரன் ஜான்சிராணி தந்தை அருளானந்தனிடம் கூறியதால், ஜான்சிராணியை நேற்று முன்தினம் செல்போனில் தொடர்பு கொண்ட அவரது தந்தை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜான்சிராணி ேநற்று முன்தினம் வேலை செய்து வந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீசார்  விசாரித்து வருகின்றனர்.


Tags : house maid ,cousin ,MGR ,suicide , MGR cousin's, house maid, commits, suicide
× RELATED எம்ஜிஆர் நகர் பகுதியில் போதை மாத்திரைகள் விற்ற பெண் உட்பட 5 பேர் கைது