×

டாஸ்மாக் கடைகளில் இருந்து சமுதாய கூடத்துக்கு மது பாட்டில்கள் மாற்றம்

திருப்போரூர்: கொரோனா பரவலை தடுக் கடந்த 20 நாட்களாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதையொட்டி, மதுபாட்டில்கள் அந்தந்த கடைகளிலேயே வைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் குடிமகன்களால், டாஸ்மாக் கடைகள் உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதைதொடர்ந்து, கிராமங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வைக்கப்பட்டுள்ள மதுபாட்டில்களை பிரதான ஊர்களில் இயங்கும் கடைகளுக்கு இடமாற்றம் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி திருப்போரூர் அடுத்த ஆலத்தூரில் செயல்பட்ட டாஸ்மாக் கடையில் இருந்து சுமார் ₹6.75 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் திருப்போரூர் ரவுண்டானா அருகே உள்ள கடைக்கு மாற்றப்பட்டன.

இந்நிலையில் தாழம்பூர், சிறுசேரி, படூர், கேளம்பாக்கம், தையூர், கோவளம், மாம்பாக்கம் ஆகிய இடங்களில் செயல்படும் 8 டாஸ்மாக் கடைகளில் இருந்து சுமார் ₹40 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள், கேளம்பாக்கத்தில் உள்ள தமிழ் அன்னை சமுதாயக் கூடத்துக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைக்கப்பட்டன. அதேபோல் திருப்போரூர் அருகே வெங்கூர், கொட்டமேடு, கண்ணகப்பட்டு ஆகிய இடங்களில் இருந்து சுமார் ₹40 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் திருப்போரூரில் உள்ள பேரறிஞர் அண்ணா சமுதாய கூடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. மதுபாட்டில்கள் வைக்கப்பட்டுள்ள சமுதாயக் கூடங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.Tags : community rooms ,task shops , Conversion, wine bottles, task shops, community rooms
× RELATED போயஸ்கார்டன் வீட்டை நினைவிடமாக மாற்றுவதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி