×

இன்பம் நிறைந்த ஆண்டாக அமையட்டும்; தமிழ்ச் சகோதரர் சகோதரிகளுக்கும் பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து

டெல்லி: தமிழ்ப் புத்தாண்டு தமிழர் புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். ஒரு தமிழ் ஆண்டு என்பது வானியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் அளவிடப்பட்ட காலத்தைக் கொண்ட காலப்பகுதியாகும். பூமி சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது. இதுவே தமிழ் வருடத்தினதும் கால அளவாகும்.

சூரிய மேஷ இராசியில் பிரவேசிக்கும்போது தொடங்கும் ஆண்டு, மீன இராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது. ஆகவே தமிழ் வருடத்தின் கால அளவு எப்போதும் சீரானதாகவே இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாள், நேரம் கணிக்கப்படுகிறது. ஆங்கில நாட்காட்டியில் பெரும்பாலும் ஏப்ரல் 14 தொடங்கும் தமிழ் ஆண்டு சில ஆண்டுகளில் ஏப்ரல் 13 அல்லது 15 நாட்களில் தொடங்கும். இதற்குக் காரணம் ஆங்கில நாட்காட்டி ஒரே சீரானதாக இல்லை என்பதே. நடைமுறைக்கு ஏற்றதாக தமிழ்ப் புத்தாண்டு ஒரு குறிப்பிட்ட நாளில் கொண்டாடப்பட்டாலும், தமிழ்ப் பஞ்சாங்கங்களில் அந்த நாளில் ஆண்டு பிறக்கும் சரியான நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் அடிப்படையிலேயே ஆண்டுக்காலம் கணிக்கப்படுகிறது.

உலக முழுவதும் உள்ள தமிழகர்கள் குறிப்பாக தமிழகத்தில் இன்று சித்திரை 1-ம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடுகின்றன. இந்நிலையில், தமிழ் புத்தாண்டு கொண்டாடும் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அனைவருக்கும், குறிப்பாக என் தமிழ்ச் சகோதரர் சகோதரிகளுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இன்பம் நிறைந்த ஆண்டாக இது அமைந்திடப் பிரார்த்திக்கிறேன். எதிர்வரும் ஆண்டில் உங்கள் விழைவுகள் யாவும் நிறைவேறிடட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

விஷு வாழ்த்து:

விஷு திருநாளையொட்டி மலையாள மொழி பேசும் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி விஷூ வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் விஷு வாழ்த்துக்கள்! ஒரு புதிய ஆண்டு புதிய நம்பிக்கையையும் புதிய ஆற்றலையும் தருகிறது. வரவிருக்கும் ஆண்டு ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நல்ல ஆரோக்கியத்தையும் கொண்டுவரட்டும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Tags : Tamil Brothers and Sisters Let It Be ,Joy , Let it be a year of joy; Prime Minister Modi Wishes New Year to Tamil Brothers and Sisters
× RELATED ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக யோஷிஹிடே சுகா தேர்வு