×

7,500 கோடி வழங்கியடி விட்டர் சிஇஓ

நியூயார்க்: கொரோனா வைரஸ் நிவாரண நிதியாக, தனது சொத்தில் 7,500 கோடி  மதிப்புள்ள பங்குகளை டிவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி வழங்கியுள்ளார்.கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்ற தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர். இதற்கிடையே, கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவும், மக்களுக்கு உதவும் நோக்கிலும் பல்வேறு நிறுவனங்கள் பல கோடி ரூபாய்களை நிவாரண உதவிகளாக வழங்கி வருகின்றன.

இந்நிலையில், டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஜாக் டோர்சி, தனது சொத்தில் ₹7,500 கோடி மதிப்புள்ள 1,98,33,400 ஸ்கொயர் ஈக்விட்டி பங்குகளை, லிமிடெட் லையபிலிட்டி கம்பெனி என்ற நிறுவனத்திற்கு கொடுத்துள்ளது. இந்த பங்குகள் மூலம் கிடைக்கும் பணத்தை கொரோனா வைரஸ் நிவாரணத்திற்கு பயன்படுத்தப்பட உள்ளது.

Tags : Vitter CEO ,CEO ,Twitter , Corona, Twitter CEO
× RELATED மறுபயன்பாட்டு ராக்கெட் தரையிறக்கம்...