×

வெளியூர் செல்ல பாஸ் தருவது குறைக்கப்படும்: கூடுதல் டிஜிபி தகவல்

சென்னை: சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:  தமிழகத்தில் கடந்த 24ம் தேதி முதல் ேநற்று வரை ஊரடங்கு உத்தவை மீறியதாக மொத்தம் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 477 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1 லட்சத்து 75,636 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 1 லட்சத்து 39,008 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அபராத தொகையாக 68 லட்சத்து 57,344 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

 வெளி மாவட்டங்களுக்கு செல்லும் அனுமதி பாஸ்களை குறைக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம். சில இடங்களில் தேவையில்லாமல் பாஸ்கள் வழங்கப்படுகிறது. அது குறைக்கப்படும். ஒரு சில மாவட்டத்தில் கலர் மாஸ்கள் வழங்கப்படுவது போல் மற்ற மாவட்டங்களில் வழங்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். வெளிநாட்டினர் எவ்வளவு பேர் தங்கி உள்ளனர் என்பது குறித்து கணக்கெடுப்பு வருவாய் துறையிடம் தான்  உள்ளது. காவல் துறையிடம் கணக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : outsiders , Outdoors, Boss, Extra DGP, Corona
× RELATED பாஜ தலைவர்களை வெளியாட்கள் எனக் கூறி...