×

டிஜிட்டல் பண பரிவர்த்தனை: ஸ்ருதிஹாசன் யோசனை

சென்னை: கொரோனா பரவுவதால் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறையை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்கிறார் நடிகை ஸ்ருதிஹாசன். இது குறித்து அவர் கூறியது: கொரோனா பரவலை தடுக்க பல வழிமுறைகள் நமக்கு கூறப்படுகின்றன. அவற்றை கவனமாக கேட்டு நாம் கடைபிடிக்க வேண்டும். பண நோட்டுகளை பயன்படுத்திய பிறகும் கூட கைகளை நன்றாக கழுவ வேண்டும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். சில ஊர்களில் கிருமிநாசினி கொண்டு ரூபாய் நோட்டுகளை சுத்தப்படுத்தும் காட்சிகளையும் பார்த்தேன். இதையெல்லாம் தவிர்க்க டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறையை மக்கள் பயன்படுத்தலாம். இவ்வாறு ஸ்ருதிஹாசன் கூறினார்.

Tags : Sruthihasan , Digital Money Transfer, Sruthihasan
× RELATED பசுமை நகராட்சி நிதிப்பத்திரம் மூலம்...