ஊரடங்கின்போது மக்களுக்கு உதவ கால்சென்டரில் வேலைக்கு சேர்ந்த நடிகை நிகிலா விமல்

சென்னை: வெற்றிவேல் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நிகிலா விமல். அதன் பிறகு கிடாரி, பஞ்சுமிட்டாய், கார்த்தி ஜோடியாக தம்பி படங்களில் நடித்தார். நிகிலா விமல் கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் தலிகரபம்பா என்ற தனது சொந்த ஊரில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னூர் மாவட்ட பஞ்சாயத்து சார்பில் விளம்பரம் ஒன்று செய்யப்பட்டது. அதில், ஊரடங்கின்போது மக்களுக்கு தேவையான பொருட்கள் கிடைக்க உதவும் வகையில் கால்சென்டர் இயங்கப்படும். அதில் பணியாற்ற தன்னார்வல தொண்டர்கள் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை கண்ட நிகிலா விமல் அந்த விளம்பரத்தின் மூலம் மாவட்ட பஞ்சாயத்தின் கால்சென்டரில் சம்பளம் எதுவும் பெறாத தன்னார்வல பணியாளராக சேர்ந்துள்ளார்.

Related Stories:

More