×

கனடாவில் மகன் கவலையில் விஜய்

சென்னை: கொரோனா பரவும் சமயத்தில் மகன் சஞ்சய் கனடாவில் இருப்பதால் கவலையில் இருக்கிறார் விஜய். நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய், படிப்பை முடித்துவிட்டு, டைரக்‌ஷன் தொடர்பான மேற்படிப்புக்காக கனடாவில் தங்கியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த சமயத்தில் சஞ்சய் கனடாவில் சிக்கியிருப்பதால் விஜய் கவலையில் இருக்கிறாராம். தினமும் அவர் மகனுடன் பேசி வருகிறார். அங்குள்ள சூழலையும் கேட்டு, தனிமையிலேயே இருக்கும்படி மகனுக்கு விஜய் அறிவுரை கூறி வருகிறாராம். சில மாதங்களுக்கு முன் குறும்படம் ஒன்றை இயக்கிய சஞ்சய், அதில் நடித்தும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Vijay ,Canada , Vijay , Canada, son
× RELATED இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும்...