×

ஓராண்டிற்கு 30% சம்பள பிடித்தம்: தேர்தல் ஆணையர்கள் சம்மதம்

புதுடெல்லி: நாட்டின் தேர்தல் ஆணையர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு இணையாக மாதம் ஒன்றுக்கு 2.50 லட்சம் ஊதியம் பெறுகின்றனர். இவர்கள் கொரோனா  தடுப்பு பணிகளுக்கு பங்களிக்கும் வகையில் தங்களது சம்பளத்தில் 30  சதவீதத்தை எடுத்துக் கொள்ள சம்மதித்துள்ளனர்.   இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ``கொரோனா வைரஸ்  தடுப்பு பணிகளுக்காக பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடம் அரசு நிதி  திரட்டி வருகிறது. அரசுக்கு ஊதியம் வழங்குவதன் மூலம் ஏற்படும் சுமையை  குறைக்க, அதற்கு உதவும் வகையில்,  பல்வேறு அரசு துறையினரும் ஊதியத்தில் ஒரு  பகுதியை நிதியாக வழங்குகின்றனர்.

இதனையொட்டி தேர்தல் ஆணையத்தின் சார்பாக  தலைமை தேர்தல் ஆணையர், 2 தேர்தல் ஆணையர்கள் தாமாக முன்வந்து இம்மாதம்  முதல் ஓராண்டிற்கு  தங்களது அடிப்படை சம்பளத்தில் 30 சதவீதத்தை கொரோனா  தடுப்பு பணிகளுக்கு அளிக்க முன்வந்துள்ளனர்’’ என்று கூறப்பட்டுள்ளது.

Tags : Election Commissioners , lection Commissioners consent,salary
× RELATED திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள்...