×

பொருளாதாரத்தை மீட்க ஜிடிபியில் 6% நிதியுதவி அறிவிக்க வேண்டும்: பிரதமருக்கு காங்கிரஸ் கோரிக்கை

புதுடெல்லி: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா காணொளி காட்சி மூலம் நேற்று டெல்லியில் அளித்த பேட்டியில் கூறியதாவது: தற்போது அசாதாரண சூழல் நிலவுகிறது. இதற்கு அசாதாரண நடவடிக்கைகள் தேவை. ஊரடங்குக்குப்பின், பொருளாதாரத்தின் பல துறைகளை புதுப்பிக்க, நிதியுதவி திட்டங்களை பிரதமர் மோடி தைரியமாக அறிவிக்க வேண்டும். இந்த நிதியுதவி திட்டம், நாட்டின் ஜிடிபியில் 5 முதல் 6 சதவீதமாக இருக்க வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் எல்லாம் தங்களின் ஜிடிபியில் 15 சதவீதத்தை நிதியுதவி திட்டங்களாக அறிவித்துள்ளன. அமெரிக்கா 10 சதவீத ஜிடிபியை நிதியுதவியாக அறிவித்துள்ளது. இந்த நேரத்தில் நிதி பற்றாக்குறை, பணவீக்கம் பற்றி எல்லாம் அரசு கவலைப்படக் கூடாது.

ஒவ்வொரு மாநிலத்துக்கும், மத்திய அரசிடமிருந்து சிறப்பு நிதியுதவி கிடைக்க வேண்டும். அதோடு மாநிலங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைகளை எல்லாம் வழங்கி, முடக்கத்தால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி பிரச்னையை தீர்க்க உதவ வேண்டும்.  இந்த நீண்ட முடக்கத்தால் 40 கோடி இந்திய தொழிலாளர்கள் ஏழ்மை நிலைக்கு  செல்வார்கள் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. அதனால் தொழிற்சாலைகள் மீண்டும் செயல்படுவதற்கு நிதியுதவி தேவை. சிறு தொழில் மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்கு வட்டியில்லாமல் வங்கிகள் கடன் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளா

Tags : Congress , Economy, GDP, Prime Minister, Congress
× RELATED நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார்...