×

ரோஜாவனம் சுகாதார ஆய்வாளர், மாணவர்கள் கொரோனா தடுப்பு பணி

நாகர்கோவில்: நாகர்கோவில் ரோஜாவனம் பராமெடிக்கல் சுகாதார ஆய்வாளர் பயிற்சி கல்லூரி மாணவர்கள் பொது சுகாதார துறையின் அறிவுரைப்படி, பல்வேறு மாவட்டங்களில் கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சுகாதார துறையுடன் இணைந்து பஸ்நிலையம், ரயில் நிலையம், மார்க்கெட், வணிக நிறுவனங்களில் நோய் தடுப்பு பணியும் கிருமி நாசினிதெளித்தல் உள்ளிட்ட மேற்பார்வை பணியையும் மேற்கொண்டனர்.
தற்போது மாவட்ட எல்லையான களியக்காவிளை, நெட்டா, காக்காவிளை செக்போஸ்ட் உள்ளிட்டபகுதிகளிலும் வட்டார ஆரம்ப சுகாதார மையங்களிலும் சுகாதார துறையினருடன் இணைந்து வீடு வீடாகசென்று தனிமைப்படுத்த பட்டவர்கள் குறித்து விவரங்களை சேகரித்தல், பொதுமக்களுக்கு கொரோனாவிழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள வழங்குதல், கிருமி நாசினி தெளிக்கும் பகுதிகளை மேற்பார்வையிடுதல்உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கோவில்பட்டி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் உள்ள சுகாதார துறை பணியாளர்களுடன் இணைந்து கொரோனா நோய் தடுப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி துணைத்தலைவர் டாக்டர் அருள்ஜோதி ஆலோசனைப்படி, கல்லூரி முதல்வர் லியாகத்அலி தலைமையில் பேராசிரியர்கள் அய்யப்பன், துரைராஜ், சிவதாணு, பகவதி பெருமாள், மரிய ஜாண்,கார்த்திக், சாம்ஜெபா, லூசியா, ஆகியோர் மாணவர்களை ஒருங்கிணைத்து நோய் தடுப்பு பணிமேற்கொண்டு வருகின்றனர்.



Tags : Rojavanam Health Inspector , Rojavanam Health Inspector, Students, Corona Prevention Work
× RELATED தாம்பரம் மாநகராட்சி பகுதியில்...