×

டி.என்.பி.எஸ்.சி. தலைவராக ஐ.ஏ.எஸ்.அதிகாரி கா.பாலச்சந்திரன் நியமனம்...தமிழக அரசு உத்தரவு

சென்னை: டி.என்.பி.எஸ்.சி. தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரி கா.பாலச்சந்திரனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. Tamil Nadu Public Service Commission TNPSC எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  www.tnpsc.gov.in, தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த டி.என்.பி.எஸ்.சி., தேர்வாணையத்தின் தலைவராக அருள்மொழி ஐஏஎஸ் பதவி வகித்து வந்தார்.

அருள்மொழியின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, டி.என்.பி.எஸ்.சி., தலைவராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி கா.பாலசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலச்சந்திரன், கடந்த 2 ஆண்டுகளாக வணிகவரி மற்றும்  பதிவுத்துறையில் முதன்மைச் செயலாளராக கா.பாலச்சந்திரன் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, கடந்த 2017 ம் ஆண்டு நடத்தப்பட்ட குருப் 2 ஏ தேர்வில் ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் பலர் தேர்வாகினர். இது குறித்த சிபிசிஐடி விசாரணையில் தேர்வு முறைகேடுகளில் ஈடுப்பட்டவர்கள் பலர் கைது செய்யப்பட்டு  வருகின்றனர். டி.என்.பி.எஸ்.சி. தலைவராக பாலச்சந்திரன் நியமித்தது மூலம், தேர்வு முறைகேடுகள் விரைவில் தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : K. Balachandran ,President , Tienpiesci Appointment of IAS Superintendent K. Balachandran as leader ...
× RELATED ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்...