×

நான் சொந்த ஊரை தவிர.. எங்கேயும் போனதில்லை’ என கெஞ்சியும்.. மளிகைக்கடைக்காரரை தூக்கி வந்து திருச்சி கொரோனா வார்டில் அனுமதி

* வெளிநாடு சென்று திரும்பிய தகவலால் சுகாதாரத்துறை அதிரடி

திருச்சி: திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் வாலவந்தியை சேர்ந்த நடராஜன் மகன் செல்லதுரை(29). இவர் அப்பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவரது குடும்பத்தினர் அப்பகுதியில் வாழையடி வாழையாக மளிகை கடை வைத்து நடத்தி வருகின்றனர். நேற்றுமுன்தினம் இரவு சுகாதாரத்துறையினர் தாசில்தார் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் இவரது வீட்டிற்கு சென்று வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்து இவ்வளவு நாட்களாகியும் ஏன் மருத்துவ பரிசோதனைக்கு வரவில்லை என கூறி, அவரை வலுக்கட்டாயமாக 108 ஆம்புலன்சில் ஏற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அவரை ஆம்புலன்சில் ஏற்றும் போதும் கூட, நான் இந்த ஊரை விட்டு எங்கேயும் போனதில்லை, அப்புறம் எப்படி வெளிநாடு சென்றிருக்க முடியும் என கூறி கதறி அழுதார்.

இவரது கூக்குரல் கேட்டு அக்கம்பக்கத்தினரும் திரண்டு வந்து இவர் எங்கேயும் போனதில்லை. நாங்கள் தினமும் அவரை பார்த்து வருகிறோம். அப்படி இருக்கும்போது எப்படி வெளிநாடு சென்றிருக்க முடியும் என கேட்டனர். ஆனாலும் எதையும் காதில் வாங்காத அதிகாரிகள், செல்லதுரையை குண்டுகட்டாக தூக்கி ஆம்புலன்சில் போட்டு திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதித்து பாிசோதித்து வருகின்றனர். இதுகுறித்து போலீசாரிடம் விசாரித்தபோது, செல்லதுரை பெயரில் மர்ம ஆசாமி ஒருவர் போலி பாஸ்போர்ட் எடுத்து வெளிநாடு சென்று வந்துள்ளார். தற்போது வெளிநாடு சென்று வந்தவர்களின் பட்டியலில் செல்லதுரை பெயர், முகவரி இருந்துள்ளது. இதனால், செல்லதுரையை கொரோனா வார்டில் போலீசார் சேர்த்துள்ளனர்.



Tags : hometown ,anywhere , Except , hometown.
× RELATED எடப்பாடி சொந்த ஊரில் அதிமுகவில்...