×

ஜெய்ப்பூர் போலீஸ் நூதன தண்டனை ஃப்ரீயா வெளியே சுத்தினா ரீமிக்ஸ் பாட்டை கேட்கணும்

சென்னை: 2009ம் ஆண்டு ‘டெல்லி 6’ என்ற இந்தி படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இதில் இடம்பெற்றிருந்த ‘‘மஸாக்கலி’’ என்ற பாடல் பெரிய வரவேற்பை பெற்றது. சமீபத்தில் வெளியான ‘மர்ஜாவான்’ ‘‘இந்தி  படத்துக்காக ‘மஸாக்கலி’’ பாடலை ரீமிக்ஸ் செய்து பயன்படுத்தியுள்ளனர். இதற்கு இன்னொருவர் இசை அமைத்திருந்தார். சமீபத்தில் வெளியான இந்த பாடல் கடும் எதிர்மறை விமர்சனத்தை சந்தித்தது. ‘200 பேர் கஷ்டப்பட்டு உருவாக்கிய பாடல் ‘மஸாக்கலி’. அது குறுக்குவழியில் தயாரானது அல்ல. ஒரிஜினல் பாடலையே கேளுங்கள்’’ என்று ஏ.ஆர்.ரஹ்மானும் டிவிட்டரில் கூறியிருந்தார்.

இந்நிலையில், தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில், வீட்டை விட்டு வெளியே வந்து வீணாக சுற்றுபவர்களை எச்சரிக்க நூதன தண்டனை ஒன்றை ஜெய்ப்பூர் காவல்துறை தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. அதில், ‘தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களை ஒரு அறையில் அடைத்து வைத்து, ‘மஸாக்கலி’’ ரீமிக்ஸ் பாடலை திரும்ப, திரும்ப போட்டு கேட்க வைப்போம்’ என்று கூறப்பட்டுள்ளது.


Tags : Jaipur Police , Curfew, Corona, Jaipur, Police, Punishment, Remix
× RELATED கொரோனில் விளம்பர விவகாரம்: பாபா...