×

பிளாஸ்மா சிகிச்சைக்கு எய்ம்ஸ் பச்சைக்கொடி: மிக விரைவாக குணமடைய செய்யலாம்

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இன்னமும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இப்போதுள்ள நோய் எதிர்ப்பு மருந்துகள், காய்ச்சல் மருந்துகள் ஆகியவற்றை கொண்டே அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனா வைரசை பொருத்த வரையில் ஒரு முறை, அந்த வைரஸ் தாக்கினால் மீண்டும் இந்த வைரஸ் தாக்காது என்று கூறப்படுகிறது. ஏனெனில், வைரசுக்கு எதிராக நம் உடலில் செல்கள் எதிர்ப்பு சக்தியை பெற்று விடுவதுதான். இதனால் பிளாஸ்மா மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கலாம் என்று ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. இதை முதலில் தெரிவித்தது கேரள மருத்துவர்கள்தான். இதற்காக பரீட்சார்த்த ரீதியில் மத்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையும், பிளாஸ்மா மூலம் சிகிச்சை அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. அதாவது தற்போது மெதுவாக பலர் கொரோனா சிகிச்சையில் குணமடைந்து வெளியே வருகின்றனர். அவர்களின் உடலில் இருந்து ரத்தத்தை எடுத்து, அதில் இருந்து தட்டணுக்களை பிரித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்தும்போது, அவர்களின் உடலும் எதிர்ப்பு சக்தியை பெறும். இதன் மூலம் விரைவிலேயே அவர் குணமடைவார். இந்த சிகிச்சைக்கு, குணமடைந்தவர்கள் ரத்தத்தை தர முன் வர வேண்டும். வழக்கமாக ரத்த தானம் அளிப்பது போன்றதுதான் இதுவும். பயப்படஒன்றும் இல்லை என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.

Tags : Plasma therapy, AIIMS, coronavirus
× RELATED போராட்டங்கள் நடத்தியபோதும் தடையை...