×

கொரோனா தடுப்பு நிதிக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் 10.42 லட்சம் வழங்கியது

சென்னை: கொரோனா தடுப்புக்கான முதலமைச்சர் நிவாரண நிதிக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் 10.42 லட்சம் வழங்கியுள்ளது.  இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறது. அந்தவகையில், கொரோனா தடுப்புக்கான முதலமைச்சர் நிவாரண நிதிக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம்10.42 லட்சத்தை வழங்கியுள்ளது. மெட்ரோ ரயில் நிர்வாகத்தில் பணிபுரியும் 502 அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் ஒருநாள் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டு முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.Tags : Metro Rail Administration , Corona Block Fund, Metro Rail Administration
× RELATED கொரோனா தடுப்பு நிதிக்கு கிடைக்கும்...