×

முன்னாள் விவசாய அணி செயலாளர் கே.பி.ராமலிங்கம் திமுகவில் இருந்து நீக்கம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: திமுக விவசாய அணி முன்னாள் செயலாளர் கே.பி.ராமலிங்கத்தை திமுகவில் இருந்து நீக்கி மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். திமுக விவசாய அணி மாநில செயலாளராக இருந்தவர் கே.பி.ராமலிங்கம். இவரின் விவசாய அணி மாநில செயலாளர் பதவி அண்மையில் பறிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளிலும் இருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் தற்போது அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகரத்தை சேர்ந்த கே.பி.ராமலிங்கம் கழக கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அவரிடம் கேட்கப்பட்ட விளக்கத்திற்கு அளித்த பதில் ஏற்றுக் கொள்ளும்படி இல்லாத காரணத்தால், அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி(டிஸ்மிஸ்) வைக்கப்படுகிறார். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : announcement ,Removal ,KP Ramalingam ,DMK ,MK Stalin Former Agricultural Team ,MK Stalin , Former Agricultural Team Secretary, KP Ramalingam, DMK, MK Stalin
× RELATED நாமக்கல்லில் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ‘ரோடு ஷோ’..!!