×

நடிகையின் கண்ணீர் வீடியோ

சென்னை: இந்தியாவுக்கு வர முடியாததால் நியூஜெர்சியிலிருந்து வீடியோ வெளியிட்டு கதறி அழுதுள்ளார் நடிகை அங்கீதா. பிரசாந்த் ஜோடியாக லண்டன், சுந்தர்.சி இயக்கிய தகதிமிதா படங்களில் நடித்தவர் அங்கீதா. தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். திருமணத்துக்கு பிறகு அமெரிக்காவிலுள்ள நியூஜெர்சியில் கணவருடன் வசித்து வருகிறார். ஆண்டுதோறும் நாடு திரும்பி, சில மாதங்களுக்கு தனது பெற்றோர் வீட்டுக்கு அங்கீதா வந்துவிடுவார். ஆனால் இம்முறை அதுபோல் வரமுடியவில்லை எனக் கூறும் அவர், நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் பேசியிருப்பதாவது: நியூஜெர்சியில் தங்கியிருக்கிறேன். அமெரிக்காவின் பெரும்பாலான நகரங்களில் மிகவும் பதற்றமான சூழல் நிலவுகிறது. கொரோனா நோயாளிகளால் அனைத்து மருத்துவமனைகளுமே நிரம்பி விட்டன.

புற்றுநோய் உள்பட வேறு எந்த நோய்க்குமே இங்கு மருத்துவம் பார்ப்பதில்லை. நாளுக்கு நாள் பயப்படும் விதமாகவே சூழல் உள்ளது. எனது அம்மாவை நினைத்து தினமும் அழுதபடியே இருக்கிறேன். வீட்டை விட்டு எங்கும் போக முடியவில்லை. எனது குடும்பத்தாரை சந்தித்து ஒரு வருடமாகிவிட்டது. அவர்களை நினைத்து தவித்துக்கொண்டிருக்கிறேன். இவ்வாறு கண்ணீர் மல்க அவர் கூறியுள்ளார்.



Tags : Actress, India, Tear Video, Corona
× RELATED ரேஷன் பொருள் கடத்தல் வழக்கில்...