×

எங்க வண்டியவா மடக்குற...? போலீஸ் கையை வெட்டிய கும்பல்

அமிர்தசரஸ்: வாகனத்தை போலீசார் மறித்ததால் ஆத்திரம் அடைந்த கும்பல், போலீஸ்காரரின் கையை வெட்டியது. பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அம்மாநிலத்தில் வரும் 30ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய வேலைகள் இன்றி வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாட்டியாலாவில் நேற்று காலை 6.15 மணி அளவில் ஊரடங்கை மீறி வந்த வாகனங்களை போலீசார் சோதனை செய்துக் கொண்டிருந்தனர். அப்போது சீக்கியர்களின் தீவிர பிரிவாக கருதப்படும் ‘நிஹாங்க்ஸ்’சை சேர்ந்த 5 பேர் ஒரு காரில் வந்துள்ளனர்.

அவர்களை பாட்டியாலாவின் காய்கறிச் சந்தையில் முன் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் நிறுத்தி, வாகனத்தை இயக்குவதற்கான அனுமதிச் சீட்டை காண்பிக்கும்படி கூறியுள்ளனர். வாகனத்தில் வந்தவர்கள் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டனர். அங்கு வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை அடித்து நொறுக்கினர். இதனால் போலீசார் அவர்களை சத்தமிட்டபோது, அந்த கும்பல் சப் இன்ஸ்பெக்டரின் கையை வாளால் துண்டாக வெட்டியது. தடுக்க வந்த போலீசாரையும் சரமாரியாக தாக்கிவிட்டு காரில் தப்பிச் சென்றனர். இதற்கிடையே, சப் இன்ஸ்பெக்டரின் வெட்டப்பட்ட கையை அறுவை சிகிச்சை மூலம் நேற்று மாலை டாக்டர்கள் வெற்றிகரமாக மீண்டும் சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 7 பேரை கைது செய்துள்ளனர்.

Tags : gang , Curfew, Corona
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே காங்....