×

கரூர் ஜிஹெச்சில் மருத்துவர்கள் பயன்படுத்திய உடைகளை பள்ளம் தோண்டி புதைக்க முடிவு: கிராம மக்கள் எதிர்ப்பு

கரூர்: கரூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பயன்படுத்திய உடைகளை கல்லூரி பின்புறம் புதைக்க அப்பகுதியில் வசிக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கரூர் சணப்பிரட்டி வடக்கு காந்தி கிராமம் பகுதியில் அரசு மருத்துவக்கல்லு£ரி மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் 110 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 23 பேர் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் நாமக்கல், திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து சிகிச்சைக்காக வந்துள்ளனர். இவர்களுக்கு 11 டாக்டர்கள் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் பிபிஇ எனப்படும் கவச உடை, என் 95 எனப்படும் முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து வருகின்றனர். இவர்கள் தினமும் புதிய உடைகளை பயன்படுத்த வேண்டியுள்ளது.

அவர்கள் பயன்படுத்திய கவச உடைகள் கல்லூரி பின்புறத்தில் கொட்டப்படுகின்றன. மருத்துவக்கழிவுகளும் குப்பையாக அங்கு கொட்டி கிடக்கிறது. தூய்மைப்பணியாளர்கள் குப்பைகளை மட்டுமே அகற்றுகின்றனர். இதனால் அங்கு கிடக்கும் மருத்துவக்கழிவுகளை பள்ளம் தோண்டி புதைப்பதற்கு முடிவு செய்துள்ளனர். இதற்காக மருத்துவக்கல்லூரியின் பின்புறத்தில் பெரிய பள்ளம் தோண்டி வருகின்றனர். இதற்கு சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இங்கு புதைத்தால், சுற்றுச்சூழல் பாதிக்கும் என்றும் பொது மக்கள் கூறுகின்றனர். ஆனாலும் இந்த இடத்திலேயேபுதைக்க மருத்துவ கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Tags : doctors ,protesters ,Karur , Karur, doctors, clothes, villagers, protest
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்