×

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது; கொரோனா சோதனைக்கான தனியார் ஆய்வகங்களின் கட்டணத்தை அரசே ஏற்கும்: பீலா ராஜேஷ் பேட்டி

சென்னை: கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறது. இதனிடையே தினமும் சுகாதாரத்துறை தரப்பில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு நிலவரம் குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை செய்யலாளர் பீலா ராஜேஷ்;

* தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1075-ஆக அதிகரித்துள்ளது.
* இன்று ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
* இதுவரை 8 மருத்துவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* தமிழகத்தில் கொரோனா வைரஸ் தோற்றால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
* கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 50 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்
* இன்று ஒரே நாளில் 6 பேர் குணமடைந்துள்ளனர்.

* தமிழகத்தில் 39,041 பேர் வீட்டுகண்காணிப்பில் உள்ளனர்.
* 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்தவர்கள் எண்ணிக்கை 58,189 பேர்.
* நாடு முழுவதும் கொரோனா பரவல் 459 தடுப்பு வளையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
* 10,655 மாதிரிகள் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளன
* அரசு கண்காணிப்பில் 162 பேர் உள்ளனர்.
* தமிழ்நாடு முழுவதும் 20,40,289 வீடுகள் கண்காணிப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன.

* அரசு மருத்துவமனைகளில் 14 ஆய்வகங்களும், 9 தனியார் ஆய்வகங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன
* கொரோனா சோதனைக்கான தனியார் ஆய்வகங்களின் கட்டணத்தை அரசே ஏற்கும்.
* தமிழகத்தில் இதுவரை 23 பரிசோதனை ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
* கொரோனா பாதித்தவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* ஐசிஎம்ஆர் பரிந்துரையை ஏற்று 5 மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
* ஐ.வி.ஆர்.எஸ். மூலம் கொரோனா பாதிப்பு அறிகுறி தெரிந்து கொள்ள 94999 12345 எண் அறிமுகம்

* தமிழகத்தில் 1.5 லட்சம் கர்ப்பிணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
* தமிழகம் முழுவதும் உள்ள கர்ப்பிணி பெண்களை கண்காணிக்க சிறப்பு அலுவலர்கள் நியமனம்
* 5 கர்ப்பிணிக்கு ஒரு அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


Tags : Beela Rajesh ,Government ,Tamil Nadu ,laboratories ,corona testing , Tamil Nadu, Corona vulnerability, Government, Beela Rajesh
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்