×

குன்னூர் சுற்று வட்டார பகுதியில் திடீர் மழையால் காய்கறிகள் அழுகும் அவலம்

குன்னூர்: குன்னூரில் பெய்த கன மழை காரணமாக மலைக்காய்கறிகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவால் பல்வேறு கட்டுப்பாட்டுகளை மாவட்ட நிர்வாகம் விதித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலும் தேயிலைக்கு அடுத்தபடியாக விவசாயிகள் மலைக்காய்கறிகளான கேரட், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகள் பயிரிட்டு வருகின்றனர். அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், திடீரென பெய்த மழையின் காரணமாக விவசாய நிலங்களில் காய்கறிகள் அனைத்தும் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தற்போது காய்கறிகள் விற்பனை செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாலும் பொருட்களுக்கு சரியான விலை இல்லாததாலும் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். பெரும்பாலான தொழிலாளர்கள் வேலைக்கு வராததால் அறுவடை செய்வதில் சிக்கல் நிலவி வருகிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் ஆய்வுகள் செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : region ,Coonoor ,circuit region Vegetable rot , Coonoor ,circuit ,region,sudden rain
× RELATED கொல்லிமலை முதல் காந்திபேட்டை வரை புறவழி சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்