சென்னையில் இன்று முதல் பேக்கரி கடை திறக்க அனுமதி: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், சென்னையில் நோய் தொற்றாமல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சமூக இடைவெளியை பின்பற்ற பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது தினசரி காலை 6 மணி முதல் 1 மணி வரை மட்டும் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடை மற்றும் காய்கறி கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிலும் சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகளுக்கு மாநராட்சி அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் வீடுகளில் பொதுமக்கள் அனைவரும் முடங்கி கிடக்கும் நிலையில் ஸ்நாக்ஸ் எதுவும்  கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். உணவு மட்டுமே கிடைத்து வருவதால் ஸ்நாக்ஸ் எதுவும் இல்லாமல் சிறு குழந்தைகள் வரை அவதிப்பட்டு வருவதாக கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்குள் இன்று முதல் பேக்கரி கடைகள் காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை இயக்கலாம்’’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>