×

கொரோனா தடுப்பு பணிக்கு ஆலன் கல்வி நிறுவனம் ரூ.51 லட்சம் நிதி உதவி

சென்னை: ஆலன் கல்வி நிறுவனம் கொரோனா தடுப்பு பணிக்காக பிரதமரின் கேர்ஸ் நிதிக்கு ₹51 லட்சம் நிதி உதவி அளித்துள்ளது. நாடு முழுவதும் 12 மாநிலங்களில் உள்ள 25 ஆலன் ஆய்வு மையங்களின் குழு உறுப்பினர்கள் இதில் பங்களிப்பு செய்துள்ளனர். கொரோனா தடுப்பு பணிக்காக ஆலன் நிறுவனம் இதுவரை ₹92 லட்சம் நன்கொடை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது என்று ஆலன் இயக்குனர் எஸ்.ராஜேஷ் மகேஸ்வரி தெரிவித்தார்.  கொரோனா தடுப்பு பணியில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில், ஆலன் கல்வி நிறுவனம் தங்களது பங்களிப்பை செலுத்தும் வகையில் நிதி உதவி வழங்கியுள்ளது.

அதன்படி, முதற்கட்டமாக ₹25 லட்சம் நிதி முதலமைச்சர் கோவிட்-19 நிவாரண நிதியில் ஒப்படைக்கப்பட்டது. கோட்டாவில், தினசரி தொழிலாளர்களுக்கு ரேஷன் விநியோகம் செய்வதற்காக மாவட்ட நிர்வாக நிதிக்கு ₹12.5 லட்சம், ஜலவரில் உள்ள மக்களுக்கு உதவ ₹2.5 லட்சம், நாக்பூர் மாநகராட்சிக்கு ₹2.5 லட்சம் மற்றும் ₹51 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும், கோட்டா மாணவர்களுக்கு ஆலன் அனைத்து வழிகளிலும் உதவுகிறது.  மாணவர்கள் மற்றும் ஏழை மக்களுக்கு தினமும் 7 ஆயிரம் பாக்கெட் உணவு வழங்கப்படுகிறது,’’ என்றார்.

Tags : Corona ,Allen Education Agency , Allen Education Agency,donates ,Rs 51 lakh ,Corona prevention
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...