×

500 விலை மளிகைப்பொருட்கள் அனைவருக்கும் வழங்கவேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: கடந்த 17 நாட்களாக அமலில் உள்ள நாடு முடக்கத்தால் மக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு உட்பட அத்தியாவசிப் போருள்களை 500 விலையில் நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்யும் நடவடிக்கை வரவேற்கத் தக்கது. ஆனால் அதே சமயம் இந்த நியாய விலைப் பொருள்கள் அனைவருக்கும் கிடைக்குமா என்ற கேள்வி எழுகிறது.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடி குடும்பங்கள் உள்ள நிலையில் 10 லட்சம் பொட்டலங்கள் மட்டுமே விற்பனை செயவது சமூக இடைவெளி நிறுத்தல் என்ற முறை உடைத்துவிடும்.

மேலும் குடும்ப அட்டை கிடைக்காத  குடும்பங்களுக்கும்  பயனளிக்கும் வகையில் திட்டத்தில் வழிவகை செய்ய வேண்டும். இது தவிர, தற்போது தமிழ்நாடு அரசு வழங்கிய ஆயிரம் ரூபாய் மற்றும் ஏப்ரல் மாத உணவுப் பொருள்களில் வாழ்ந்து வருவோர் 500 விலை கொடுத்து வாங்கும் வசதியோடு இல்லை என்பதை அரசு கருத்தில் கொண்டு, இந்தப் பகுதியினருக்கு உதவ முன்வர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Mutharasan , Groceries, Mutharasan
× RELATED கச்சத்தீவு பற்றி 10 ஆண்டாக வாய்...