×

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு பணிக்குழு: மண்டல வாரியாக அமைப்பு

சென்னை: தமிழகம்  முழுவதும் கொரோனா  தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க மண்டல  வாரியாக   மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை கொண்ட சிறப்பு பணிக்குழுக்களை  தமிழக அரசு அமைத்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: கொரோனா  வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நபரை கண்டறிதல், நோய் பரவுவதை  தடுத்தல் உள்ளிட்ட  பணிகளை  கண்காணிக்க மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை  கொண்ட  மண்டல அளவிலான சிறப்பு பணிக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டலத்தில்  உள்ள மாவட்ட அதிகாரிகள் குழுக்களுடன் இணைந்து    செயல்பட வேண்டும். அது வருமாறு: சென்னை மண்டலம்:

ராஜேந்திரகுமார் (முதன்மை செயலாளர், சிறு, குறுத்தொழில் துறை), அபாஷ்குமார் (ஏடிஜிபி, பொருளாதார குற்ற தடுப்புப் பிரிவு, சென்னை), டி.உதயசந்திரன் (முதன்மை செயலாளர், தொல்லியல் துறை),  டி.எஸ்.அன்பு (ஐஜி, சிலை தடுப்புப் பிரிவு சிஐடி)(திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள்) வேலூர் மண்டலம்: மங்கத்ராம் சர்மா (முதன்மை செயலாளர், ஆவண காப்பகம்), வி.வனிதா (ஐஜி, ரயில்வே), (வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்கள்) விழுப்புரம் மண்டலம்: எல்.சுப்ரமணியம் (செயலாளர், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்), கே.வன்னியபெருமாள் (ஏடிஜிபி, கடலோர காவல் படை), (கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள்)

சேலம் மண்டலம்: ஆர்.கிர்லோஷ்குமார் (மேலாண்மை இயக்குநர், டாஸ்மாக்), எம்.என்.மஞ்சுநாதா (ஏடிஜிபி, தமிழ்நாடு காவலர் வீட்டுவசதிக் கழகம்), (சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள்) ஈரோடு மண்டலம்: ஈரோடு மாவட்டம் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. அதை, டி.என். வெங்கடேஷ் (மேலாண்மை இயக்குநர், கோ-ஆப்டெக்ஸ்), எஸ்.லட்சுமி (எஸ்.பி. பொருளாதார குற்ற தடுப்புப்பிரிவு) ஆகியோர் கண்காணிப்பார்கள்.திருப்பூர் மண்டலம்: திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு குமார் ஜெயந்த் (முதன்மை செயலாளர், ஓஎம்சிஎல்), சங்கர் ஜீவால் (ஏடிஜிபி, ஆயுதப்படை, சென்னை)திருச்சி மண்டலம்: ஆர்.ஆனந்தகுமார் (சிறப்பு செயலாளர், நிதித்துறை), சைலேஷ்குமார் யாதவ் (ஏடிஜிபி, சமூகநீதி, மனிதஉரிமை), (திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள்)

தஞ்சாவூர் மண்டலம்: எம்.எஸ்.சண்முகம் (ஆணையர், அருங்காட்சியகம், சென்னை), எம்.சி.சாரங்கன் (ஐஜி, பயிற்சி), (தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள்)  மதுரை மண்டலம்: சி.காமராஜ் (இயக்குநர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை), எஸ்.முருகன் (ஐஜி, பொருளாதார குற்ற தடுப்புப் பிரிவு), (மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி ஆகிய மாவட்டங்கள்) கரூர் மண்டலம்: சி.முனிநாதன் (ஆணையர், ஆதிதிராவிடர் நலத்துறை), அபய்குமார் சிங் (ஏடிஜிபி, நுண்ணறிவு பிரிவு சிஐடி, சென்னை) (கரூர், நாமக்கல், திண்டுக்கல் மாவட்டங்கள்) நெல்லை மண்டலம்: எம்.கருணாகரன் (இயக்குநர், கைத்தறி மற்றும் ஜவுளித்துறை), மகேஷ்குமார் அகர்வால், (ஏடிஜிபி, தலைமையக செயலாக்கப்பிரிவு), விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமாரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள்). இவ்வாறு கூறப்பட்டுள்ளது.



Tags : IAS ,Special Task Force ,organization ,IPS Officers ,IPS , Corona, IAS, IPS Officers, Special Task Force, Zone
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி...