×

செல்போன் கான்பரன்சிங்கில் 32 மனுக்கள் மீது விசாரணை

மதுரை: மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் செல்போன் கான்பரன்சிங் முறையில் 32 மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டது. கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இதனால், மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவசர மனுக்கள் மீதான விசாரணை செல்போன் கான்பரன்சிங் முறையில் நடக்கிறது. இதற்கான மனுக்களை இமெயில் மூலம் தாக்கல் செய்ய வேண்டும். இதன்படி, நேற்று மட்டும் 32 மனுக்கள் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தன.  இதில், 5 பேருக்கு கொலை வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டது. 10 பேருக்கு பல வழக்குகளில் முன்ஜாமீன் வழங்கப்பட்டது.

11 பேருக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட நிபந்தனை தளர்த்தப்பட்டது. 3 பேருக்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டது. ஒருவரது நிபந்தனையில் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் நிபந்தனையை தளர்த்தக் கோரிய இரு மனுக்கள் மீதான விசாரணையில் அரசு வக்கீல் ஆட்சேபம் தெரிவித்ததால், தள்ளிவைக்கப்பட்டது. ஒரே நாளில் 32 மனுக்கள் மீதான விசாரணை செல்போன் கான்பரன்சிங்கில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Investigation ,cellphone conferencing ,Investigations , Cell Phone Conference, Madurai District Court, Corona
× RELATED கிருஷ்ணகிரி அருகே உள்ள SBI வங்கி ATM-ஐ...