×

சில்லி பாயின்ட்...

* ‘எதிர்காலத்தில் இந்திய கால்பந்து கூட்டமைப்பு தலைவர் பதவியை வகிப்பது குறித்து நிச்சயமாகப் பரிசீலிப்பேன்’ என்று இந்திய அணி முன்னாள் கேப்டன் பைசுங் பூட்டியா கூறியுள்ளார்.
* இந்திய துப்பாக்கிசுடுதல் அணி வீரர், வீராங்கனைகள் தங்களின் வீடுகளிலேயே பயிற்சி வசதியை ஏற்படுத்திக்கொண்டு, சர்வதேச ஆன்லைன் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்காக ஊரடங்கு காலத்திலும் தீவிரமாகப் பயிற்சி செய்யத் தொடங்கி உள்ளனர்.
* ஊரடங்கு உத்தரவு விலக்கிக்கொள்ளப்பட்டதும், தொடர்ச்சியாக 3 ஆண்டுகளுக்கு வீட்டுக்கே திரும்பாமல் விளையாடித் தீர்க்க வேண்டும் என்று விரும்புவதாக இந்திய அணி நட்சத்திர ஸ்பின்னர் யஜ்வேந்திர சாஹல் தெரிவித்துள்ளார்.
* கோவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக வீட்டில் முடங்கியுள்ள நிலையில்... கராத்தே பயிற்சி, புத்தகங்கள் வாசிப்பு, மகளுடன் விளையாடுவது என்று பொழுதைக் கழிப்பதாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஜிங்க்யா ரகானா கூறியுள்ளார்.
* ஆஸ்திரேலிய டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லி பார்தி கிரிக்கெட் பேட் வைத்து பயிற்சி செய்யும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
* மிகவும் நெருக்கடியான இந்த காலகட்டத்தில் ஒப்பந்த வீரர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட நேர்ந்தாலும் அதற்கு நாங்கள் மனதளவில் தயாராகவே இருக்கிறோம் என்று பாகிஸ்தான் டெஸ்ட் அணி கேப்டன் அசார் அலி கூறியுள்ளார்.
* எம்.எஸ்.டோனி மற்றும் ஆர்.அஷ்வின் நடத்தும் பயிற்சி அகாடமிகளில் ஆன்லைன் கிரிக்கெட் பயிற்சி வகுப்புகளை தொடங்கி உள்ளனர்.
* கொரோனாவால் உலகமே முடங்கிக் கிடந்தாலும் பெலாரஸ் நாட்டில் மட்டும் கால்பந்து போட்டிகள் மூடப்பட்ட ஸ்டேடியங்களில் நடைபெற்று வருகின்றன.
* அமெரிக்காவில் நடைபெற இருந்த நட்பு ரீதியிலான சர்வதேச சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து போட்டித் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது.



Tags : Indian ,team ,Paisung Bhutia , Indian football, former captain of Indian team, Paisung Bhutia
× RELATED 2024-25ம் ஆண்டில் இந்திய அணி தனது சொந்த...