×

தூரத்திலிருந்தே இதய துடிப்பை அறியும் கருவி கண்டுபிடிப்பு

தூரத்தில் இருந்தே ஒரு நபரின் இதயத்துடிப்பை கண்டறியும் கருவியை மும்பை ஐஐடி குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.  நாடு முழுவதும் இப்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நோய் பாதிக்கப்பட்டவரின் அருகில் செல்லும்போது, மற்றவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் மருத்துவ குழுவினர்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், தூரத்தில் இருந்தே ஒருவரின் இதயத்துடிப்பை கண்டறியும் கருவியை மும்பை ஐஐடி குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த கருவியானது செல்போன்களில் இருப்பது போன்ற புளூடூத் தொழில்நுட்பத்தில் செயல்படுகிறது.

நோயாளியின் இதயத்துடிப்பை தூரத்தில் இருந்தே கணக்கிட்டு, அதை மின்காந்த அலைகளாக மாற்றி டாக்டரின் கருவிக்கு தெரிவிக்கும். இதன் மூலம் பாதிக்கப்பட்டவரின் இதயத்துடிப்பை அறிந்து கொள்ள முடியும். இந்த கருவிக்கு காப்புரிமையும் பெறப்பட்டுள்ளது. தற்போது பல்வேறு மருத்துவமனைகளுக்கு இக்குழுவினர் நவீன ஸ்மார் ஸ்டெதாஸ்கோப்பை வழங்கி உள்ளனர்.


Tags : Discovery , Heartbeat, instrument
× RELATED வட இந்தியர்களின் வரவை ஆதரிக்கும் படமா: பாஸ்கர் சக்தி பதில்