×

எழும்பூர், துறைமுகம், கொளத்தூர் தொகுதிகளில் ஆய்வு ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளை சென்னையில் நேற்று ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கினார். எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேத்துப்பட்டு டோபி கண்ணா பகுதியில் சலவை தொழிலாளர்களுக்கு அரிசி, காய்கறி, மளிகை பொருட்களை வழங்கினார். இதையடுத்து, பெரியமேடு பேரக்ஸ் ரோடு பகுதியில் தினக்கூலி தொழிலாளர்களுக்கும், துறைமுகம் தொகுதியில் திமுக சட்டமன்ற அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் அரிசி, காய்கறி, மளிகை பொருட்களையும் வழங்கினார். திருவிக நகர் தொகுதிக்குட்பட்ட குக்ஸ் சாலை பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் சாலையோரம் வசிப்பவர்களுக்கு அரிசி, மளிகை பொருள் வழங்கினார்.

தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செம்பியம் காவல்நிலையத்தில் காவலர்களுக்கு கிருமி நாசினி, முகக்கவசம் வழங்கினார். கொளத்தூர் வீனஸ் மார்க்கெட் பகுதியில் கிருமி நாசினி சுரங்கப்பாதையை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். ேமலும், திருவிக நகர் பேருந்து நிலையத்தில் கிருமி நாசினி சுரங்கப்பாதையை திறந்து வைத்து வியாபாரிகள், பொதுமக்களுக்கு கையுறை, முகக்கவசம் வழங்கினார். கொளத்தூர் சட்டமன்ற அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் அரிசி, மளிகை பொருட்களை வழங்கினார். இதில், எம்எல்ஏக்கள் பி.கே.சேகர்பாபு, தாயகம் கவி, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கிரிராஜன், கொளத்தூர் பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Udayanidhi Stalin ,Egmore ,Harbor ,Kolathur , Egmore, Port, Kolathur, Corona, Udayanidhi Stalin
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...