×

சென்னையில் நாளை முதல் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை பேக்கரிகள் திறக்கலாம்: மாநகராட்சி உத்தரவு

சென்னை: சென்னையில் நாளை முதல் பேக்கரிகள் திறக்க அனுமதி அளித்து மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை பேக்கரிகள் திறந்திருக்க மாநகராட்சி அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் இன்று மேலும் 58 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 969 ஆக அதிகரித்துள்ளது. ஈரோட்டில், கொரோனா பாதித்தவர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கையும் 10 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில், 182 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசின் அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய மளிகை, காய்கறிகள் உள்ளிட்டவை பொருட்களை வாங்க கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே சென்னையில் உள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அவர்களின் வீடுகளுக்கே சென்று நேரடியாக விநியோகிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.

இதனால், அத்தியாவசிய தேவைகளான காய்கறி, மளிகை கடை ஆகியவைகள் தவிர மற்ற கடைகள் திறக்ககூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் நாளை முதல் பேக்கரிகள் திறக்க அனுமதி அளித்து மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை பேக்கரிகள் திறந்திருக்க மாநகராட்சி அளித்துள்ளது. கடை ஊழியர்கள் மாஸ்க், கையுறை அணிவதோடு சானிடைஸர்கள் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். கூட்டம் கூடுவதை தவிர்த்து இடைவெளியை பின்பற்ற வேண்டும். குழந்தைகளுக்கு தேவையான பிரெட், ரஸ்க், பிஸ்கட், பன் அவசியம் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


Tags : bakery ,Chennai , Chennai, Bakery, Corporation
× RELATED கோவையில் இன்று வைகோ பிரசாரம்