×

சீனாவின் விலங்கு மாமிச சந்தைகளை மூடாவிட்டால் கொடிய வைரஸ் உருவாகும் : நிபுணர்கள் எச்சரிக்கை

பெய்ஜிங் : சீன மக்களில் வாழ்க்கையில் விலங்குகள் மற்றும் மாமிச சந்தைகள் முக்கியமானவை ஆனால் அது தற்போது உலகம் முழுவதும் கொரோனாவாக கோரதாண்டவம் ஆடி வருகிறது.சீனாவில் செயல்பட்டு வரும் விலங்குகள் மற்றும் மாமிச சந்தையிலிருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது என்ற செய்திகளையடுத்து அந்த சந்தைகளை உடனடியாக மூடுமாறு அமெரிக்க எம்.பி.க்கள் சீனாவுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

மனிதர்களுக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுத்தும் வகையில் சீனாவின் மாமிச உணவு மற்றும் மிருகங்களுக்கான சந்தை செயல்படுவதால் உடனடியாக அந்த சந்தைகளை மூடுமாறு அமெரிக்காவுக்கான சீன தூதர் சியூ தியாங்கையிடம் இடம் அமெரிக்க எம்பிக்கள் கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளனர்.கடந்த 2006 ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான கரண்ட் ஒபீனியன்ஸ் என்ற இதழில் எதிர்கால நோய்க்கிருமிகள் சீன மாமிச சந்தைகளில் இருந்து தான் பரவும், அதன் மையம் இது போன்ற சந்தைகள்தான் என்று கூறப்பட்டிருந்தது.

சீனாவில் 10 ஆண்டுகள் பணியாற்றிய வைரஸ் நிபுணர் பீட்டர் டஸாக், அங்கு நூற்றுக் கணக்கில், ஆயிரக்கணக்கில் விலங்குகளும் பண்ணைகளும் உள்ளன. வைரஸ் இன்னமும் கூட அங்கு இருக்கலாம்.
ஆகவே நாம் இதிலிருந்து மீண்டு வந்தாலும் இந்த வைரஸ் மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தத் தயாராக இருக்கிறதா என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

Tags : China ,experts , China, animal, meat market, deadly virus, evolving, experts, warning
× RELATED சீனாவில் மலைப்பாதை சாலை சரிந்து...