×

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயில் மலையடிவாரத்தில் 32 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு கிருமி நாசினி தெளிப்பு: தீயணைப்பு வாகனத்தின் கொண்டு தெளிக்கப்பட்டது

சோளிங்கர்: சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயில் மலையடிவாரத்தில் உள்ள 32 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு தீயணைப்பு வாகனம் கொண்டு மஞ்சள் கலந்த கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. சோளிங்கர் பேரூராட்சிக்குட்பட்ட சித்தூர் ரோடு, வாலாஜா ரோடு, வங்கிகள் உள்ளிட்ட பகுதிகளில் செயல் அலுவலர் சென்பகராஜன் தீயணைப்பு நிலயை அலுவலர் கோபால் தலைமையில் தீயணைப்பு வாகனத்தை கொண்டு தீயணைப்பு வீரர்கள், பேரூராட்சி பணியாளர்கள் நேற்று கிருமி நாசினி தெளித்தனர்.

மேலும், மஞ்சள் கலந்த கிருமி நாசினி லட்சுமி நரசிம்மர் கோயில் மலையடிவாரம், அங்குள்ள ஆஞ்சநேயர் சிலை, சிறிய மலையடிவாரம், தக்கான் குளக்கரை, நுழைவு வாயில் உள்ளிட்ட இடங்களில் தெளிக்கப்பட்டது.

Tags : Sholinar Lakshmi Narasimhar Temple ,Anjaneyar ,Anjaneya ,Sholingar Lakshmi Narasimha Temple , Sholingar, Lakshmi Narasimha Temple, Anjaneyar Statue, Anthropogenic Spray
× RELATED இந்தியா- சீனா எல்லை பிரச்னை ஒரு...