×

ஊரடங்கு உத்தரவால் ‘படுத்தது’ பால்கோவா தொழில்

திருவில்லிபுத்தூர்1:  ஊரடங்கது உத்தரவு காரணமாக கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால்,  திருவில்லிபுத்தூர் பால்கோவா தொழில் முடங்கிப் போயுள்ளது. இதனால் பால்கோவா தயாரிப்பவர்கள் பல லட்சம் வரை நஷ்டம் அடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் என்றாலே ஆண்டாள் கோயிலும், பால்கோவாவும்தான் அனைவரின் ஞாபகத்துக்கு வரும். தனித்துவம் வாய்ந்த, ருசி மிகுந்த திருவில்லிபுத்தூர் பால்கோவா தொழில், ஊரடங்கு உத்தரவு காரணமாக கடைகள் மூடப்பட்டுள்ளதால் முடங்கிப் போயுள்ளது. இம்மாவட்டத்தில் சிவகாசியில் பட்டாசு தொழில் எவ்வளவு அதிகமாக உள்ளதோ, அந்த அளவிற்கு திருவில்லிபுத்தூரில் பால்கோவா தொழில் ஒரு குடிசைத் தொழிலாக உள்ளது.

பால்கோவா தொழிலை நம்பி நேரடியாக பல ஆயிரம் குடும்பங்களும், மறைமுகமாக எண்ணற்ற குடும்பங்களும் உள்ளன.  இத்தொழில் முடங்கிப் போயுள்ளதால் இதில் பணியாற்றிய தொழிலாளர்கள் மாற்றுத்தொழில் ஏதும் இல்லாமல் வீட்டில் முடங்கிப்போய் உள்ளனர். நாள் ஒன்றுக்கு ரூ.ஒரு லட்சம் வரை விற்பனையாகும் பெரிய பால்கோவா கடைகளும் மூடப்பட்டுள்ளன. நகரிலும் பால்கோவா கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் பல லட்சம் நஷ்டம் அடைந்துள்ளதாகவும், அன்றாட உணவுத்தேவைக்கே சிரமப்படுவதாகவும் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோர் தெரிவித்துள்ளனர்.

Tags : Curfew, balkova industry
× RELATED சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள...