×

கோவையில் மாற்றுப் போதைக்காக சானிடைசர் கிருமி நாசினியை குடித்து இளைஞர் உயிரிழப்பு : தமிழகத்தில் இதுவரை 11 குடிமகன்கள் பலி

கோவை : கோவையில் இளைஞர் ஒருவர் போதைக்காக சானிடைசர் கிருமி நாசினியை குடித்து உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டதால் மது பிரியர்கள், தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. கோவையை அடுத்த சூளுரைச் சேர்ந்த பெர்னார்ட் என்ற இளைஞர் போதைக்காக  சானிடைசர் கிருமி நாசினியை குடித்து உயிரிழந்துள்ளார். கடந்த 2 நாட்களாக உணவு ஏதுமின்றி,  சானிடைசர் கிருமி நாசினியை மட்டுமே குடித்து வந்த அவர், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் மது கிடைக்காமல் தற்கொலை செய்துக் கொண்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் முகச்சவர திரவத்தை குளிர் பானத்தில் கலந்து குடித்து 3 பேர் பலியாகினர். செங்கல்பட்டு அருகே குளிர்பானத்தில் வார்னிஷை கலந்து குடித்து 3 பேர் உயிரிழந்தனர். சென்னையில் கூலித் தொழிலாளி ஒருவரும் சேலத்தில் இறைச்சி கடை நடத்தி வந்த ஒருவரும் மது கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டனர். தமிழகத்தில் மது கிடைக்காமல் அதிகரிக்கும் தற்கொலைகளால் மது பிரியர்களின் உறவினர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 


Tags : Tamil Nadu ,deaths ,Goa , Drug, Anti-Doping, Sanitizer, Disinfectant, Youth, Death, Citizens
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...