×

இயேசு பெருமாள் மானிடத்தை மீட்க மரணத்தை வென்று 3-ம் நாள் உயிர்த்தெழுந்தார்: முதல்வர், துணை முதல்வர் ஈஸ்டர் வாழ்த்து

சென்னை: மானிடத்தை மீட்க மரணத்தை வென்று மூன்றாம்நாள் உயிர்த்தெழுந்த ஒப்பற்ற நாளான ஈஸ்டர் பெருவிழாவை கொண்டாடும் கிறிஸ்தவ பெருமக்கள்  அனைவருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூட்டாக ஈஸ்டர் தின வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில, சமூகத்தின் நன்மைக்காக இவ்வாண்டு வீட்டிலேயே இறை வழிபாடுகளை மேற்கொண்டிருக்கும் மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி!

இறைமகன் இயேசு பெருமாள் சிலுவைப்பாடுகளை ஏற்று, மானிடத்தை மீட்க மரணத்தை வென்று மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த ஒப்பற்ற விழாவாம்  ஈஸ்டர் பெருவிழாவை கொண்டாடும் கிறஸ்வ சகோத, சகோதரிகளுக்கு எங்கள் இதயமார்ந்த உயிர்ப்பு ஞாயிறு நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக. உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா நச்சுக்கிருமியை எதிரித்து ஒரணியில் நின்று போராடிக் கொண்டிருக்கும் நாள் இருள் அகலும் ஒளி  தோன்றி நம்மை மகிழ்ச்சியுடன் வாழவைக்கும் என்னும் புதிய நம்பிக்கையை தருவதாக இந்த ஆண்டின் ஈஸ்டர் பெருவிழா அமைகிறது.

 சமூகத்தின்  நன்மைக்காக வழித்திருந்தும், தனித்திருந்தும், வீட்டிலேயே இறைவழிபாடுகளை இந்த ஆண்டு மேற்கொண்டிருக்கும் மக்களுக்கு நன்றி  தெரிவித்துக்கொள்கிறோம். இறைவனின் கருணையும், இரக்கடும் நம் அனைவரது உள்ளங்களிலும், இல்லங்களிலும் நிறைந்திடட்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.


Tags : Jesus ,deputy ,Easter ,Day of Resurrection: The First and Foremost Easter Greetings , Resurrected on the 3rd day after death to restore humanity: First and foremost Easter greetings
× RELATED உலக முழுவதும் இன்று ஈஸ்டர்...