×

ஆதனூர் ஊராட்சியில் திமுக சார்பில் 10 ஆயிரம் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள்

கூடுவாஞ்சேரி: ஆதனூர் ஊராட்சியில் திமுக சார்பில், 10 ஆயிரம் குடும்பத்தினருக்கு வீடு, வீடாக சென்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர் ஊராட்சியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. தற்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், திமுக சார்பில், ஆதனூர் ஊராட்சியில் உள்ள 10 ஆயிரம் குடும்பத்தினருக்கான நலத்திட்ட உதவிகள் வீடு, வீடாக சென்று நேற்று வழங்கப்பட்டது. ஊராட்சி திமுக செயலாளரும் தொழிலதிபருமான தமிழமுதன் தலைமை தாங்கினார்.

தொழிற்சங்க முன்னாள் தலைவர் வீரராகவன், திமுக இளைஞரணி செயலாளர் ஸ்ரீதர், மகளிரணி செயலாளர் விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சூர்யா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திமுக மகளிரணி ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஒன்றிய கவுன்சிலருமான மலர்விழி தமிழமுதன் கலந்துகொண்டு, 10 ஆயிரம் குடும்பத்தினருக்கு வீடு, வீடாக சென்று தலா 5 கிலோ அரிசி உள்பட மளிகை பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் வழங்கினார். முடிவில், கபாலி நகர் கிளை செயலாளர் ரவி நன்றி கூறினார்.    


Tags : families ,DMK , 10 thousand,families,benefitted ,DMK ,Adhanur panchayat
× RELATED 9 லட்சம் குடும்பங்களை 10 ஆண்டுகளாக...