×

நோய் குணம் அடைந்தவருக்கு பதிலாக கொரோனா பாதித்த டிஎஸ்பியை வீட்டிற்கு அனுப்பிய டாக்டர்கள்: ஐதராபாத் அரசு மருத்துவமனையில் அலட்சியம்

திருமலை: ஐதராபாத் காந்தி அரசு மருத்துவமனையில் நோய் குணமானவருக்கு பதிலாக, கொரோனா பாதித்த டிஎஸ்பி அலியை வீட்டிற்கு அனுப்பி டாக்டர்கள் அலட்சியமாக செயல்பட்டு உள்ளனர். தெலங்கானா மாநிலம், கொத்தகூடம் டிஎஸ்பி.யாக இருப்பவர் அலி. அவரது மகன் வெளிநாட்டுக்கு படிக்க சென்று வீடு திரும்பியதால் அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. அவர் மூலமாக, டிஎஸ்பி அலி, அவர் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண் ஆகியோருக்கு கொரோனா உறுதி  செய்யப்பட்டு, ஐதராபாத் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். முன்னதாக, தனது மகன் வெளிநாட்டில் இருந்து வந்த தகவலை மறைத்த குற்றத்துக்காக அலி  சஸ்ெபண்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில், சிகிச்சைக்கு பிறகு அலி குணமடைந்து விட்டதாக கூறி அரசு மருத்துவர்கள் நேற்று அவரை வீட்டிற்கு அனுப்பினர். அவரும் கொத்தகூடத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். அதன் பிறகுதான், மற்றொரு அலிக்கு பதிலாக டிஎஸ்பி அலியை டாக்டர்கள் வீட்டிற்கு அனுப்பியது  தெரிய வந்தது. தவறை உணர்ந்த டாக்டர்கள், உடனடியாக கொத்தகூடம் போலீசாருக்கு போனில் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று, அலியை மீண்டும் ஐதராபாத் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று விட்டனர். அவர் வீட்டுக்கு சென்ற பிறகு யாருடன் இருந்தார், என அறிந்து  அவர்களும் தனிமைப்படுத்தப்பட உள்ளனர்.

Tags : home ,Doctors ,Hyderabad Government Hospital ,Corona Confirmations , Corona, DSP, Doctors, Hyderabad Government Hospital
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு