×

தேடி வந்து தாக்கும் கொரோனா கடும் சுவாச பிரச்னை இருப்பவர்கள் உஷார்

இந்தியாவின் பிரதான மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமாக, ‘இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்’ (ஐசிஎம்ஆர்) உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இது பற்றி கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5,911 பேரில் 104 பேரிடம், கடந்த பிப்ரவரி 15ம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரையில் தோராய அடிப்படையில் ஆய்வு நடத்தியது. 20 மாநிலங்களில் உள்ள 52 மாவட்டங்களில் இது மேற்கொள்ளப்பட்டது. இதில், அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது. இந்த 104 பேரில் 40 பேர், சமீபத்தில் வெளிநாடு செல்லாமலும்,  கொரோனா பாதித்தவர்களுடன் எந்த தொடர்பும் இல்லாமலும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர் என தெரிய வந்துள்ளது. ஆனால், இவர்கள் அனைவரும் வைரஸ் தொற்றுக்கு முன்பாகவே கடுமையான சுவாச பிரச்னையால் பாதிக்கப்பட்டு இருந்தவர்கள். இதன் மூலம், கடுமையான சுவாச பிரச்னை இருப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் எளிதாக தாக்குவது உறுதியாகி இருக்கிறது.

‘மத கூட்டங்களை அனுமதிக்க கூடாது’:
அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள உத்தரவில், ‘இந்த மாதத்தில் புனிதவெள்ளி, பைசக்தி, ரங்காலி பிகு, விஷு, பொய்லா பைஷக், புத்தாண்டு, மகா விஷுப சங்கராந்தி உட்பட பல்வேறு விழாக்கள், மத நிகழ்ச்சிகள் வருகின்றன. எனவே, ஊரடங்கை முழுமையாக கடைப்பிடிக்க மாநில, யூனியன் பிரதேசங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக, மதம் மற்றும் விழா சம்பந்தப்பட்ட எந்த கூட்டங்களுக்கும் அனுமதி அளிக்கக் கூடாது,’ என்று கூறப்பட்டுள்ளது.

Tags : Investigators ,Corona , Corona, respiratory problem
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...