×

வீட்டிலேயே மாஸ்க் தயாரிக்கலாம்: நடிகை ராஷ்மி யோசனை

சென்னை: கன்னட நடிகை ராஷ்மி கோபிநாத், தமிழில் ‘‘காக்டெய்ல் படத்தில் நடிக்கிறார். கொரோனா ஊரடங்கு காலத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட அவர், வீட்டிலேயே மாஸ்க் தயாரிக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் கொடூரமான தொற்றுநோய் என்பதால், தயவுசெய்து அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். பொறுப்பில்லாமல் வெளியில் சுற்ற வேண்டாம். பொழுதுபோக்குக்காக நண்பர்களுடன் அரட்டையடிக்கவும், பார்ட்டிக்கு செல்லவும் உங்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லவும் வேண்டாம். அப்படி செய்தால், கொரோனா வைரஸ் பரவி அனைவரையும் கடுமையாக பாதிக்கும். அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்லும்போது மாஸ்க் அணிந்துகொள்ளுங்கள்.  

அந்த மாஸ்க்கை நீங்களே தயார் செய்துகொள்ளலாம். எனக்கும், என் குடும்பத்துக்கும் தேவையான முக கவசத்தை நானே தயாரிக்கிறேன். சுத்தமான துணியை மூன்று அடுக்குகளாக வைத்து நாமே மாஸ்க் தயாரிக்க முடியும். இது மிகவும் எளிதானது.தயவுசெய்து டாக்டர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கான மாஸ்குகளை விட்டுக்கொடுங்கள். காரணம், நம்மைவிட அவர்களுக்குத்தான் அதிகமான முக கவசங்கள் தேவைப்படும். அவர்கள் நமக்காகத்தான் கடுமையாக போராடுகிறார்கள்.


Tags : Rashmi ,Home , Mask, Corona, Actress Rashmi
× RELATED மஹாவீர் ஜெயந்தி, மே தினத்தில் டாஸ்மாக் விடுமுறை