×

நீட் விண்ணப்பத்தில் திருத்தமா? 14 வரை ஆன்லைனில் செய்யலாம்: அவகாசம் நீட்டித்து என்டிஏ அறிவிப்பு

சென்னை: நீட் தேர்வு இந்த ஆண்டு மே மாதம் நடக்கும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்து இருந்தது. நீட் தேர்வு எழுத விரும்பிய மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து முடித்துள்ள நிலையில் அந்த விண்ணப்பங்களில் திருத்தங்கள் ஏதாவது செய்ய விரும்பினால் செய்யலாம் என்று கடந்த 1ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது ெகாரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை நாடு முழுவதும் தீவிரமாக செய்யப்பட்டு வருவதால், திருத்தம் செய்யும் தேதியை ஏப்ரல் 14ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்களின் வரிசைப்படி தேர்வு மையங்களுக்கான இடங்களை ஒதுக்கப்பட்டு வருகின்றன.

இருப்பினும் நிர்வாக காரணங்களுக்காக வேறு இடங்களிலும் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படுவது  குறித்து தேசிய தேர்வு முகமை முடிவு செய்யும். நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் தற்போது, ஆன்லைன் மூலம் தேர்வு மையங்களுக்கான இடங்களை தேர்வு செய்திருந்தால் அவற்றை தற்போது திருத்தம் செய்துக் கொள்ளலாம். தேசிய தேர்வு முகமையின் இணைய தளமான ntaneet.nic.in  என்ற இணையம் மூலமாக 14ம் தேதி மாலை 5 மணி வரை செய்து சமர்ப்பிக்க வேண்டும்.


Tags : announcement ,NTA , Neet Application, Online, NDA, Corona
× RELATED மதுரையில் 22-ம் தேதி அரசு சித்திரை பொருட்காட்சி: ஆட்சியர் அறிவிப்பு