×

இந்தியாவில் கொரோனா தாக்குதலால் 40 கோடி தொழிலாளர்கள் வேலையிழக்கும் ஆபத்து: பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:  இந்தியா, பிரேசில், நைஜீரியா ஆகிய நாடுகளில் தான் ஊரடங்கால் அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர் என எச்சரித்துள்ள பன்னாட்டு தொழிலாளர்கள் அமைப்பு, இந்தியாவில் மட்டும் 40 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் வேலைகளை இழந்து வறுமையில் வாடக்கூடும் என்றும் கூறியுள்ளது. இதேநிலை இந்த ஆண்டு முழுவதும் நீட்டிக்கக்கூடும் என்றும், 2020ம் ஆண்டின் இறுதியில் நிலைமை மேலும் மோசமாகக் கூடும் என்றும் பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு கணித்துள்ளது.

முதற்கட்டமாக பாதிக்கப்படும் அமைப்புசாராத தொழிலாளர்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்குதல், அடுத்தக்கட்டமாக அமைப்புசாரா தொழில்துறையில் ஏற்பட்ட பாதிப்புகளைப் போக்குவதன் மூலம், அத்துறையை பழைய நிலைக்கு திருப்பி, அதன் மூலம் வேலையிழந்த அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு கிடைக்கச் செய்தல் ஆகிய 2 கட்ட நடவடிக்கை மூலம் தான் இந்தியப் பொருளாதாரத்தில் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்புகளை போக்க முடியும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : attack ,Corona ,India ,Ramadas ,founder , Ramadas, Founder of Corona, India
× RELATED உணவக உரிமையாளர் மீது தாக்குதல்: பாஜக நிர்வாகி கைது