×

இளம் வக்கீல்களுக்கு 10 ஆயிரம் நிதியுதவி வழங்க கோரி வழக்கு

சென்னை:  ஊரடங்கு உத்தரவால் வறுமையில் வாடும் இளம் வக்கீல்களுக்கு 10 ஆயிரம் நிதியுதவி வழங்க கோரிய வழக்கில் பதிலளிக்கும்படி பார்கவுன்சில் செயலாளர்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.  சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.சி.பால்கனகராஜ். மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ஊரடங்கால் இளம் வக்கீல்கள் வருமானம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். இந்த ஊரடங்கு மேலும் சில நாட்கள் நீட்டிக்கப்படலாம். எனவே, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலிடம் தற்போது உள்ள பொது நிதியைக் கொண்டு, வறுமையில் வாடும் இளம் வக்கீல்களை கண்டறிந்து, அவர்களுக்கு 10 ஆயிரம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கிற்கு 4 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி, அகில இந்திய பார் கவுன்சில் செயலாளர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.


Tags : lawyers , Curfew, Young Lawyers, Sponsored, Corona
× RELATED திண்டிவனத்தில் தேனீக்கள் கொட்டியதில்...