×

சித்தூர் அடுத்த காந்தி நகர் கிராமத்தில் கிணற்றில் விழுந்த யானை மீட்பு: பொதுமக்களை துரத்தியதால் பரபரப்பு

சித்தூர்:  சித்தூர் அடுத்த காந்தி நகர் கிராமத்தில் கிணற்றில் தவறி விழுந்த யானையை வனத்துறையினர் நேற்று மீட்டனர். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்களை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.சித்தூர் அடுத்த கங்கவரம் மண்டலம் காந்தி நகர் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களின் பிரதான தொழில் விவசாயம். இப்பகுதியில் வாழை, தென்ைன, கரும்பு, நெல் போன்றவை பயிரிட்டு வருகின்றனர்.இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக ஒற்ைற யானை இப்பகுதியில் சுற்றித்திரிந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் யானையின் அட்டகாசத்தால் கடும் அச்சத்தில் இருந்து வந்தனர். மேலும், அவ்வப்போது ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியளவில் அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் யானை தவறி விழுந்தது. பின்னர், நேற்று காலை அவ்வழியாக ெசன்ற பொதுமக்கள் யானையின் சத்தம் கேட்டு அங்கு ெசன்று பாத்தபோது கிணற்றில் யானை தவித்துக் கொண்டிருந்தது.

இதுகுறித்து, கிராம மக்கள் சித்தூர் வனத்துறையினருக்கு தகவல் ெதரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் கிணற்றில் விழுந்த யானையை பத்திரமாக மீட்டு நிலப்பகுதிக்கு கொண்டு வந்தனர்.அப்ேபாது, அங்கு கூடியிருந்த பொதுமக்களை நோக்கி யானை வேகமாக வந்ததால் அவர்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.பின்னர், வனத்துறையின் பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் யானையை கங்கவரம் வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அடிக்கடி ஊருக்குள் புகும் யானைகள்
கங்கவரம் மண்டலம் காந்தி நகர் கிராம பொதுமக்கள் கூறுகையில், ‘எங்கள் கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பயிர்களை அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வரும் யானைகள், காட்டு பன்றிகள் சேதப்படுத்தி வருகிறது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் உரிய முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வனவிலங்குகள் ஊருக்குள் நுழையாதபடி தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும்’ என்றனர்.



Tags : Gandhinagar village ,civilians ,Chittoor ,village , Elephant ,Gandhinagar, village ,Chittoor
× RELATED நடைபெற உள்ள பொதுத்தேர்தலில்...